தமிழ் கிறிஸ்தவ பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்!

Showing posts with label உண்மை பேசுதல். Show all posts
Showing posts with label உண்மை பேசுதல். Show all posts

Monday, June 27, 2011

சத்தியம் பண்ணுவது பாவமா?

தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யப்போவதாக கூறிய எடியூரப்பா இன்று காலை அக்கோயிலுக்கு சென்று தரிசனம் மட்டும் செய்துவிட்டு திரும்பினார். ஆனால் குமாரசாமி தான் சவால் விட்டபடி தனது ஆதரவாளர்களுடன் மஞ்சுநாதா சாமி முன்பு நின்று சத்தியம் செய்தார். செய்திக்கு இங்கே கிளிக்கவும். இது எடியூரப்பாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதன் மூலம் மஞ்சுநாதா சாமியின் மவுசு சற்று ஏறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


நான் சிறுவனாக இருக்கும் போது நான் சொன்னவற்றை உண்மை என சாதிக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது, ”சத்தியமா சொல்றேன்” , “ஒங்க அம்மா மேல சத்தியமா” என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தும் போது எனது தகப்பனார் என்னை மிகவும் கடிந்து கொள்வார். அவர் கூறும் காரணங்களெல்லாம் மத். 5:34-36 வரையிலான வசனங்களில் ’சத்தியம் பண்ண வேண்டாம்’ என சொல்லியிருப்பதைத் தான்.

வக்கீல்கள் தங்கள் வாதத் திறமையினாலும், அரசியல்வாதிகள் அடித்துப் பேசும் (உண்மையாகவே அடிப்பதுவும் தான்!)தங்கள் திறமையினாலும் உண்மை நிலையை சூழ்நிலைகளுக்கேற்றாற்போல் திரித்துக் கொள்வதுபோல் நாம் செய்யாமல், மத். 5:37ன் படி, ’உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்’ என்ற உண்மையை வலியுறுத்தவே சத்திய்ம் பண்ணவேண்டாம் என சொல்லப்படுகிறது.

மற்றபடி, ச்த்தியம் பண்ணின வரலாறு பழைய ஏற்பாடுகளிலேயே உண்டு. அவை எங்குமே குறைகூறப்பட வில்லை. ஆனால், மூன்றுமுறை மறுதலித்த பேதுரு, தன் நிலையை சாதிக்க, சத்தியம்பண்ணினது மாத்திரமல்ல, சபிக்கவும் செய்தான். இயேசு கூட தமது உபதேசங்களிடையே சில வேளைகளில், ’மெய்யாகவே மெய்யாகவே’ நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று கூறினதுண்டு. அவர் பொய்பேசியதே இல்லை. அதுவரையிலும் பேசியவைகளை பொய் என எடுத்துக் கொண்டால் கூட, இதனை முக்கியமாக உண்மையாக எடுத்து கொள்ள வேண்டும் என்ற முக்கியம் கருதியே, அவ்விதம் அவர் கூறினார்.

என்வே, சத்தியம் பண்ணுவது சரியா தவறா என்றால், அது தேவைதானா என்பது தான் சரியான கேள்வி. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். இவ்விதம் கூறுவதற்கு, சத்தியம் பண்ண அவசியமில்லை.